சினிமா: அஜித்தை விஞ்சினாரா சல்மான் கான்? – வீரம் படத்தின் இந்தி ரீமேக் எப்படி இருக்கிறது?

Share

சல்மான் கான்

பட மூலாதாரம், Twitter@Salman Khan

தமிழில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஹிட்டடித்த வீரம் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான ‘சிசி கா பாய் சிசி கி ஜான்’ ரம்ஜானை முன்னிட்டு வெளியாகியுள்ளது. சல்மான் கான் நடித்துள்ள இந்த படம் எப்படி இருக்கிறது? ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன?

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து 2014ல் வெளியான திரைப்படம் வீரம். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வேட்டி சட்டையுடன் கிராமத்து கதையில் அஜித் நடித்திருந்தார். பாசமுள்ள அண்ணனாக, காதலுக்காக அடிதடியை விட்டு சாந்தமான மனிதராக, பின்னர் காதலியின் குடும்பத்தை ஆபத்தில் இருந்து காப்பாற்ற மீண்டும் அடிதடியில் இறங்கும் நபராக என அஜித் இந்த படத்தில் அசத்தியிருப்பார்.

பொங்கல் வெளியீடாக ரிலீஸாக மாபெரும் வெற்றியைப் பெற்ற இப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் கட்டமராயுடு என்று ரீ மேக் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, கன்னடத்திலும் ரீ மேக் செய்யப்படம் வீரம் திரைப்படம், தற்போது ஃபர்கஜ் சம்ஜி இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் இந்தியில் ரீ மேக் செய்யப்பட்டுள்ளது.

சிசி கா பாய் சிசி கி ஜான் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் ரம்ஜான் ரிலீஸாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வீரம் தமிழில் ஹிட் அடித்ததைப் போன்று அதன் இந்தி தழுவலும் ஹிட் அடித்துள்ளதா?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com