மேற்கு வங்கத்தில், மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தராததால், ரயிலுக்காக மரத்தடியில் காத்திருந்த 50 வயது பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
உயிரிழந்த பெண், மேனகா கோடா எனத் தெரியவந்திருக்கிறது. இவருடைய கணவர் ஒரு தினக்கூலித் தொழிலாளியாவார். இப்படியான சூழலில் கச்சிகோரியா கிராமத்தில் தன்னுடைய கணவருடன் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த மேனகா கோடாவுக்கு திடீரென வெப்ப வாதம் (heat stroke) ஏற்பட்டிருக்கிறது.
உடனடியாக அவரின் கணவர், தன்னுடைய மனைவியுடன் பதார் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு மருத்துவமனை அதிகாரிகள், அவரிடம் இரண்டு பாட்டில் சலைன் (Saline) கொடுத்து, மனைவியை பர்தாமான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியிருக்கின்றனர். அப்போது அவர் ஆம்புலன்ஸ் கேட்டபோது, அதிகாரிகள் தனியார் வாகனத்தில் செல்லும்படி கூறி, ஆம்புலன்ஸ் தர மறுத்திருக்கின்றனர். தனியாக வாகனம் எடுத்துச் சொல்லுமளவுக்கு அவரிடம் பணமும் இல்லை.