Doctor Vikatan: 35 நாள்களில் ப்ளீடிங்… 15 நாள்கள் நீட்டிப்பு; ஹார்மோன் சிகிச்சைதான் ஒரே தீர்வா? | Doctor Vikatan: Bleeding in 35 days.. Is hormone therapy the only solution?

Share

Doctor Vikatan: என் மனைவிக்கு 40 வயதாகிறது. அவருக்கு எண்டோமெட்ரியாசிஸ் பிரச்னை உள்ளது. மருத்துவர் 3 மாதங்களுக்கு மாத்திரைகள் கொடுத்தார். மாத்திரை எடுக்க ஆரம்பித்த பிறகு 35 நாள்களில் அவருக்கு திட்டுத்திட்டாக ப்ளீடிங் வருகிறது. அது 15 நாள்களுக்கு நீடிக்கிறது. மருத்துவரை அணுகியபோது ப்ளீடிங்கை நிறுத்த மாத்திரைகள் கொடுத்தார். சில நேரங்களில் இப்படி நடக்கும் என்றும் அதற்கு ‘பிரேக்த்ரூ ப்ளீடிங்’ என்று பெயர் என்றும் சொன்னார்.

தேவைப்பட்டால் ஹார்மோன் மாத்திரைகள் எடுக்கலாம் என்கிறார். வெஜைனாவை ஸ்கேன் செய்து பார்த்து கவலைப்படும்படி ஒன்றுமில்லை என்றும், 3 மாதங்களுக்கு மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் பீரியட்ஸ் நார்மலாகும் என்றும் சொல்கிறார். இது குறித்து விளக்க முடியுமா?

– நந்தகுமார், விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

கர்ப்பப்பையின் உள்ளே இருக்கக்கூடிய எண்டோமெட்ரியல் கேவிட்டியில், சாதாரணமாக இருக்கக்கூடிய எண்டோமெட்ரியல் திசுவானது, அங்கே இல்லாமல் வேறிடங்களில் இருப்பதையே எண்டோமெட்ரியாசிஸ் என்கிறோம். இந்தத் திசுவானது சினைப்பையிலோ, இடுப்பெலும்புப் பகுதியிலோ, சிறுநீர்ப்பையிலோ, கர்ப்பப்பையின் மேல் பகுதியிலோ…. இப்படி எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

எண்டோமெட்ரியாசிஸ் பாதிப்புள்ள பெண்களுக்கு தீராத வயிற்றுவலி இருக்கும். பீரியட்ஸ் வருவதற்கு முன் தொடங்கி, பீரியட்ஸின் போதும் நீடித்து, பீரியட்ஸ் முடிந்தபிறகும் தொடரலாம். சிலருக்கு எப்போதுமே இந்த வலி தொடர்ந்து இருக்கலாம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com