இந்தியர்கள் தொடர்ந்து தேநீர் அருந்துவதால், HDL (High density lipoprotein) அளவை அது அதிகப்படுத்துகிறது. இது நல்ல கொலஸ்ட்ரால் எனவும் அழைக்கப்படுகிறது. தேநீரில் உள்ள கேட்டசின்கள், ரத்தத்தில் உள்ள டிரைகிளிசரைடை குறைக்க உதவுகிறது.
தினசரி உணவில் மஞ்சளைப் பயன்படுத்துவதால், அது வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின், SARS-CoV-2 தொற்று மற்றும் கோவிட்-19 தொற்றின் தீவிரத்தன்மையைக் குறைப்பதிலும், இறப்பு விகிதத்தைக் குறைப்பதிலும் முக்கியப் பங்கு வகித்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
மறுபுறம், சிவப்பு இறைச்சி, பால் பொருள்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் நுகர்வு அதிகரித்ததன் விளைவாக மேற்கத்திய மக்களிடம் கோவிட் பாதிப்பு தீவிரமாக இருந்ததாகவும் இறப்பு விகிதம் அதிகரித்ததாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.