
பெங்களூரு: அணியின் விவரங்கள் குறித்து தன்னிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கேட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய ஊழல் தடுப்பு பிரிவு உறுதி செய்துள்ளது. இதனை பிசிசிஐ தரப்பிடம் சிராஜ் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இருந்தாலும் இந்த சூதாட்ட புகாருக்கும், நடப்பு ஐபிஎல் சீசனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது ஆறு மாதங்களுக்கு முன்னர் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.