அதிக் அகமது, அஷ்ரஃப்: நேரலை கேமராக்களுக்கு முன் நடந்த படுகொலை – உத்திரபிரதேச காவல்துறை மீது எழுப்பப்படும் கேள்விகள்

Share

atiq

பட மூலாதாரம், NURPHOTO

“இரண்டு வாரங்களுக்குள் உங்களை ஏதோ ஒரு சாக்குப்போக்கு சொல்லி மீண்டும் சிறையில் இருந்து வெளியே அழைத்துச் சென்று உங்களை முடித்துவிடப்போவதாக இன்று அலகாபாத்தில் எனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த தகவலை ஒரு மூத்த அதிகாரி எனக்கு தெரிவித்தார்.”

அதிக் அகமதுவுடன் கொல்லப்பட்ட அவரது சகோதரர் அஷ்ரஃப், மார்ச் 29 ஆம் தேதி போலீஸ் காருக்குள் இருந்து எட்டிப்பார்த்து செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, இந்த அச்சத்தை வெளிப்படுத்தினார்.

சரியாக இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஏப்ரல் 15 ஆம் தேதி போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது அதிக் மற்றும் அஷ்ரஃப் கொல்லப்பட்டனர்.

ஊடகவியலாளர்கள் போல வந்த மூன்று தாக்குதலாளிகளும், நேரலை கேமராக்களுக்கு முன்னால் அதிக் மற்றும் அஷ்ரஃப்பை கொன்றனர். இந்த சம்பவத்தின் வீடியோக்கள் தொலைக்காட்சி சேனல்களில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com