அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கின்மீதான இன்றைய விசாரணையின்போது, நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு குஜராத் அரசை சரமாரியாகக் கேள்விகேட்டது.
அதில், “கர்ப்பிணி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சிலர் கொலைசெய்யப்பட்ட வழக்கை, பிரிவு 302-ன் கீழ் வரும் சாதாரண கொலை வழக்குடன் நீங்கள் ஒப்பிட முடியாது. ஆப்பிளை எப்படி ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிட முடியாதோ, அதுபோல படுகொலையை, சாதாரண கொலையுடன் ஒப்பிட முடியாது.