ஐபிஎல் டி20 கிரிக்கெட்: CSK vs RCB – தோனி விரித்த வலையில் வீழ்ந்த கோலி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எளிதான வெற்றி இழுபறியானது ஏன்?

Share

தோனி விரித்த வலையில் வீழ்ந்த கோலி

பட மூலாதாரம், BCCI/IPL

ஐ.பி.எல். தொடரில் பேட்டிங் சொர்க்கபுரியான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மீண்டும் ஒரு ரோலர் கோஸ்டர் மேட்ச் நடந்து முடிந்தது. இரு அணிகளுமே 200 ரன்களுக்கு மேல் குவித்த இந்த போட்டிகளில் கடந்த முறை எதிரணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை கட்டுப்படுத்த முடியால் தோல்வியைத் தழுவிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இம்முறை சேஸிங்கில் கோட்டை விட்டுள்ளது.

227 ரன்களைத் துரத்திய அந்த அணி, கேப்டன் டுப்ளெஸ்ஸி – மேக்ஸ்வெல் ஜோடி களத்தில் இருந்த போது எளிதில் வெற்றிபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க அவர்கள் அவுட்டான பிறகு தடம் புரண்டது.

பெங்களூரு மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 250 ரன்களைக் குவித்தாலும் கூட வெற்றி உறுதியில்லை என்பதை நேற்றைய ஆட்டமும் நிரூபித்தது. நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்த தவறுகளே, எளிதாக பெற்றிருக்க வேண்டிய வெற்றியை கடினமாக்கிவிட்டது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த கேப்டன் டுப்ளெஸ்ஸி – மேக்ஸ்வெல் ஆகிய இருவருக்கும் சில கேட்ச்களை சென்னை வீரர்கள் கோட்டை விட்டது ஒரு கட்டத்தில் சென்னை அணியின் வெற்றியையே கேள்விக்குறியாக்கிவிட்டது. பின்னர் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக கடைசியில் ஒருவழியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியைப் பதிவு செய்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com