புற்றுநோயை எதிர்க்கும் பல மில்லியன் ஆண்டு வைரஸ்கள் – ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

Share

பல மில்லியன் ஆண்டுகளாக மனித டி.என்.ஏவுக்குள் மறைந்துள்ள வைரஸ்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுவதாக, ஃபிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிட்யூட் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் செல்கள் கட்டுப்பாட்டை மீறி செல்லும்போது, பழைய வைரஸ்களின் செயலற்ற எச்சங்கள் விழித்தெழுகின்றன. இது தற்செயலாக நோயெதிர்ப்பு அமைப்பு கேன்சர் செல்களை குறிவைத்து தாக்க உதவுகிறது. இந்த ஆய்வின் மூலம் புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த, அதனை தடுக்கக்கூடிய தடுப்பூசிகளை கண்டுபிடிக்க உள்ளதாக, இந்தக் குழு தெரிவித்துள்ளது.

டி.என்.ஏ

“ ‘எண்டோஜெனஸ் ரெட்ரோ வைரஸ்கள்’ என்று அழைக்கப்படும் இந்த எச்சங்களை, ஆன்டிபாடிகள் அங்கீகரிக்கின்றன. இந்த ரெட்ரோ வைரஸ்கள் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது மரபணு குறியீட்டின் ஓர்அங்கமாக மாறி, நமது பரிணாம உறவினர்களான குரங்கில் இருந்து மனிதர்களுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது. மற்ற ரெட்ரோ வைரஸ்கள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, நமது டி.என்.ஏவில் நுழைந்திருக்கலாம்.

ஒரு புற்றுநோய், உயிரணு கட்டுப்பாடில்லாமல் வளரும்போது அது அந்த உறுப்பு முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த நேரத்தில் இந்தப் பழமையான வைரஸ்கள், அதன் மீதான தங்கள் இறுக்கமான கட்டுப்பாட்டை இழக்கின்றன. இந்த பழமையான மரபியல் அறிவுறுத்தல்களால் முழுமையான பழைய வைரஸ்களை உயிர்ப்பிக்க முடியாது.

ஆனால், அவை புற்றுநோய் அச்சுறுத்தலை கண்டறிய நோயெதிர்ப்பு அமைப்புக்கு போதுமான வைரஸ்களின் தூண்டுதல்களை உருவாக்க முடியும்” என பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிட்யூட்டில் இணை ஆராய்ச்சி இயக்குநர் பேராசிரியர் ஜூலியன் டவுன்வர்ட் கூறியுள்ளார்.

புற்றுநோய் செல்

இங்கிலாந்து புற்றுநோய் ஆராய்ச்சியைச் சேர்ந்த டாக்டர் கிளாரி ப்ரோம்லி, “நம் அனைவரின் மரபணுக்களிலும் பழங்கால வைரஸ் டிஎன்ஏ உள்ளது, நம் முன்னோர்களிடம் இருந்து வந்துள்ளது. மேலும் இந்த சுவாரஸ்யமான ஆராய்ச்சி, புற்றுநோய் கட்டுப்பாட்டில் இந்தப் பழைய வைரஸ்கள் எவ்வாறு பங்கு வகிக்கின்றன என்பதையும், நமது நோயெதிர்ப்பு அமைப்பின் துணை கொண்டு அதை எவ்வாறு அடையாளம் கண்டு அழிக்க முடியும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்குவதற்கு கூடுதல் ஆராய்ச்சி தேவை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com