ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை – ஐதராபாத் அணிகள் மோதவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 6-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி, வருகின்ற 21-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
அதன்படி, 1,500, 2,000 மற்றும் 2,500 ரூபாய் டிக்கெட்டுகள் மட்டும் கவுன்டரில் வழங்கப்படவுள்ளன. சென்னையில் நடைபெற்ற முந்தைய இரு போட்டிகளுக்கான டிக்கெட்டை வாங்க, நள்ளிரவு முதலே ரசிகர்கள் காத்துக்கிடந்தனர். ஆனால், இன்றைய டிக்கெட் விற்பனைக்கு காலையில் தான் ரசிகர்கள் வர வேண்டும் என்று காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது.
இதன்படி, தற்போது ரசிகர்கள் வரத் தொடங்கியுள்ளனர். மேலும், சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியின் போது கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்ததாக 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். எனவே, கள்ளச்சந்தையில் விற்பனை செய்யும் நோக்கில் டிக்கெட் வாங்க வரும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.