அப்போது அமித் ஷாவின் வக்கீல்; இப்போது ராகுல் காந்தி வழக்கின் நீதிபதி

Share

அமித்ஷா, ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சுபைர் அகமது
  • பதவி, பிபிசி செய்தியாளர்

‘மோதி குடும்பப்பெயர்’ வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் தன்னை குற்றவாளி என்று அறிவிக்கும் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்துள்ளார்.

போலி என்கவுன்டர் தொடர்பான ஒரு வழக்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வழக்கறிஞராக இருந்த நீதிபதி ராபின் பால் மொகேரா இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.

நீதிபதி ஆவதற்கு முன்பு, ராபின் பால் குஜராத்தில் மொகேராவில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். 2017ல் அவர் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

வழக்கறிஞர்களுக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டின் மூலமாக அவர் நீதிபதியாக ஆனார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com