உடல் நீரிழப்பு என்பது என்ன? அது எவ்வளவு ஆபத்தானது?

Share

நீரிழப்பு

பட மூலாதாரம், Getty Images

இந்தியா முழுவதும் கோடை காலம் தொடங்கி விட்டது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கூடவே, கோடைக்கால நோய்களான Heat Strokes (வெப்ப பக்கவாதம், Sun burns, Food Poisoning (உணவு நஞ்சாகுதல்) போன்றவையும் நம்மை பாதிக்கக் கூடும்.

இவற்றையெல்லாம் விட மிகவும் முக்கியமானதாகவும் அதேவேளையில் நாம் பெரிதாக கவனம் செலுத்தாததாகவும் டிஹைட்ரேசன் என்று அழைக்கப்படும் நீரிழப்பு உள்ளது. மயக்கம், உடல் சோர்வு தொடங்கி கிட்னி செயலிழப்பு போன்ற பாதிப்புகளையும் நீரிழப்பு ஏற்படுத்திவிடும் என்பதால் இதற்கு நாம் கூடுதல் கவனம் கொடுப்பது அவசியமாகிறது.

நீரிழப்பு என்றால் என்ன?

நமது உடலில் திரவமே அதிகமாக உள்ளது. உடலுக்கு இன்றிமையாததும் தண்ணீர்தான். அதனால்தான் அதிகளவு தண்ணீரை பருக வேண்டும் நம்மிடம் வலியுறுத்தப்படுகிறது. உடலில் உள்ள நீரில் இழப்பு ஏற்படுவதை நீரிழப்பு என்று அழைக்கிறோம் என்கிறார் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணரான மீனாட்சி பஜாஜ்.

“எளிதாக கூற வேண்டும் என்றால் நம் உடலுக்கு தேவையான நீரை விட நாம் குறைவாக நீரை உட்கொள்வதன் மூலமோ, அதிகளவு நீர் நம் உடலில் இருந்து வெளியேறுவது மூலமோ நீரிழப்பு ஏற்படுகிறது. உணவுக்குழாய், தோல், சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றில் தான் நாம் அதிகமாக நீரை இழக்க வாய்ப்பு உள்ளது. வயிற்றுப்போக்கு, வாந்தி, அதிகப்படியாக வேர்வை வெளியேறுவது, அதிக முறை சிறுநீர் வெளியேறுவது போன்றவை மூலம் நீரிழப்பு ஏற்படும்,” என்று விளக்கினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com