இந்த இமயமலை பூண்டு பற்றி கேள்விப்பட்டதுண்டா..? நன்மைகள் தெரிஞ்சா விடவே மாட்டீங்க..!

Share

பருவகால உணவுகள் (Seasonal foods) பல சத்தான பண்புகளுடன் நிரம்பி இருப்பதால் நிபுணர்கள் அவற்றை வழக்கமான அடிப்படையில் டயட்டில் சேர்த்து கொள்ள பரிந்துரைக்கிறார்கள். பல சத்தான பண்புகளை கொண்டுள்ள பருவகால உணவில் ஒன்று இமயமலை பூண்டு என்றழைக்கப்படும் ஹிமாலயன் கார்லிக் (Himalayan garlic).

ஒரு குறிப்பிட்ட பருவத்தில் (வசந்த காலத்தில்) அறுவடை செய்யப்படும் இது காஷ்மீரி கார்லிக், ஜம்மு கார்லிக், ஸ்னோ மவுண்டைன் கார்லிக் என்று பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. தற்போது இந்த வகை பூண்டுகள் ஏன் உங்கள் அன்றாட டயட்டின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம். பிரபல டயட்டிஷியன் சோஹினி பானர்ஜி கூறுகையில், ஹிமாலயன் கார்லிக் அளவில் சிறியது, கடினமானது மற்றும் சற்று கூரான தோற்றமுடையது. உள்ளூர் வெள்ளை வகை பூண்டு போலில்லாமல், இமயமலையின் உயரமான பகுதிகளில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ஹிமாலயன் கார்லிக் அறுவடை செய்யப்படுகிறது.

இந்த வகை பூண்டின் ஒரு பல் சுமார் 1.5 முதல் 4 சென்டி மீட்டர் வரை விட்டம் கொண்டது. இந்த வகை பூண்டு ஒரு பிரைட் ஒயிட் அல்லது க்ரீமி-ஒயிட் கலரை கொண்டுள்ளது, மேலும் இதன் சுவை சற்று காரமானது என்கிறார். தொடர்ந்து பேசிய நிபுணர் சோஹினி பானர்ஜி, ஹிமாலயன் பூண்டானது மாங்கனீஸ், வைட்டமின்கள் பி6 மற்றும் சி, காப்பர், செலினியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் நல்ல மூலமாகும் என்றார். தவிர கால்சியம் மற்றும் வைட்டமின் பி1 ஆகியவற்றின் ஆதாரமாகவும் ஹிமாலயன் கார்லிக் உள்ளது.

மேலும் இந்த வகை பூண்டு அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது, ஆன்ட்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்ட்டிபாக்டீரியல் பண்புகளையும் கொண்டுள்ளது, தவிர அதிக கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது என்கிறார் சோஹினி. தொடர்ந்து இதன் நன்மைகளை பட்டியலிட்டு உள்ள நிபுணர், இமயமலை பூண்டு ரத்தத்தின் அடர்த்தியை (density) குறைக்க உதவுகிறது, இதன் மூலம் ரத்த நாளங்களில் plaque மற்றும் உறைவு (Clots) ஏற்படுவதை இந்த பூண்டு தடுக்கிறது.

இந்த பூண்டின் ஒரு பல்-ஐ சாப்பிட்டால் கூட அது தசைகளை தளர்த்த மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் இந்த பூண்டில் உள்ள மற்றொரு ரசாயன கலவையான ஹைட்ரஜன் சல்ஃபைடு, உடலில் உள்ள சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் பிளட் பிரஷரை குறைக்க உதவுகிறது என்கிறார் பானர்ஜி. இதற்கிடையே பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லீமா மகான் தனது இன்ஸ்டா பேஜில், இரண்டாம் உலகப் போரில் ரஷ்யர்கள் பூண்டை இயற்கை ஆன்டிபயாடிக் மருந்தாகப் பயன்படுத்தினர் என கூறி பூண்டின் முக்கிய ஆரோக்கிய நன்மைகளை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியிருப்பதாவது, பூண்டு ஒரு சிறந்த ஆண்டிமைக்ரோபியல் ஆகும், இது ஈ.கோலி, ஆந்த்ராக்ஸ் போன்ற பாக்டீரியாக்களை கொல்லும் மற்றும் வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக சக்திவாய்ந்த பண்புகளை கொண்டுள்ளது. பூண்டில் உள்ள அற்புதமான பொருள் அல்லிசின், இது தொற்றை எதிர்த்துப் போராட மற்றும் கொழுப்பைக் குறைக்க, ரத்தம் உறைவதைத் தடுக்க என பல வகைகளில் உதவுகிறது. மேலும் இந்த கலவை, வைட்டமின் பி மற்றும் தியாமின் ஆகியவற்றுடன் இணைந்தால், உடலில் இன்சுலின் உற்பத்தி செய்ய கணையத்தை தூண்டுகிறது, இதையொட்டி உடல் நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது என கூறியுள்ளார்.

Also Read | Garlic Benefits: பூண்டில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

ஹிமாலயன் கார்லிக் பொதுவான வகைகளை விட அதிக வலிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. எனினும் மிக குறைவான ஆய்வுகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன என்கிறார் மகாஜன். இந்த வகை பூண்டுகளின் நன்மைகளை பெற அப்படியே பச்சையாக சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை, நசுக்கியோ அல்லது துண்டுகளாக நறுக்கியோ சாப்பிடலாம் என பரிந்துரைக்கிறார். மேலும் பூண்டின் பொதுவான வகைகளுக்குப் பதிலாக எந்த வகையான ரெசிப்பியிலும் இதை பயன்படுத்தலாம் என்று கூறினார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com