Doctor Vikatan: 12 வயதில் பற்களுக்கு கிளிப் போடலாமா? நிஜமாகவே இந்தச் சிகிச்சை பலன் தருமா? | Doctor Vikatan: Dentist Maryam Safi explains about dental treatment doubts

Share

Doctor Vikatan: என் மகளுக்கு 12 வயது. பற்கள் சற்று துருத்தியபடி உள்ளன. கிளிப் போடச் சொல்கிறார்கள் பலரும். கிளிப் அவசியமா? அது நிஜமாகவே உதவுமா? எத்தனை மாதங்களுக்குப் போட வேண்டியிருக்கும்?

பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த பல் மருத்துவர் மரியம் சஃபி…  

12 வயது என்பது இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான மிகச் சரியான வயது. Fixed braces எனப்படும் நிரந்தர கிளிப் போட்டால் உங்கள் மகளின் பற்களின் அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தையும், அவரது முக அமைப்பு மேம்படுவதையும் நிச்சயம் கண்கூடாகப் பார்க்க முடியும்.  முதல் வேலையாக உங்கள் மகளை அருகிலுள்ள பல் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

பல் மருத்துவர் மரியம் சஃபி

பல் மருத்துவர் மரியம் சஃபி

அவர் உங்கள் மகளின் பற்களின் அமைப்பைப் பார்த்துவிட்டு, நிரந்தரமான 28 பற்களும் முழுமையாக முளைத்துள்ளனவா என பார்ப்பார். அதன்பிறகு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிட்டு உங்கள் மகளுக்கேற்ற கிளிப்பை பரிந்துரைப்பார். குறைந்தபட்சம் ஒரு வருடம் முதல் அதிகபட்சமாக 18 மாதங்கள்வரை இந்த க்ளிப்பை போட்டுக்கொள்ள வேண்டியிருக்கலாம். 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com