கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே மேல்புறத்தை அடுத்த வட்டவிளையில் தோட்டத்துமடம் நவநீதகிருஷ்ணன் கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயில் அருகே தெப்ப குளம் இருக்கிறது. இந்தக் குளத்தின் அருகாமையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சத்ரபதி சிவாஜியின் 9 அடி உயர சிலை ஒன்று அமைக்கப்பட்டது. சத்ரபதி சிவாஜி பிறந்த தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், ராம நவமி, விஜயதசமி ஆகிய தினங்களில் சத்திரபதி சிவாஜி சிலைக்கு இந்து அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இந்தச் சிலையின் தலை பகுதியை நேற்று நள்ளிரவு யாரோ உடைத்திருக்கின்றனர்.