அதில்,”காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து பல பதவிகளை வழங்கியதற்குச் சோனியா காந்திம், ராகுல் காந்திக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 20 ஆண்டுகளாகக் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கான அடையாளங்கள் தற்போது இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதனால் தான் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்கவில்லை. வேறு ஒரு வழித்தடத்தில் நாட்டுக்குச் சேவையாற்ற, நல்ல நம்பிக்கையில் முயற்சி செய்ய விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர்.கேசவன் மத்திய அமைச்சர் வி.கே.சிங், பா.ஜ.க தலைமை செய்தி தொடர்பாளர் அனில் பலுனி முன்னிலையில் கட்சியில் இணைந்தார். இன்று பிரதமர் மோடி சென்னை வந்திருக்கும் சூழலில்,”ஊழலற்ற, மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகள், அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்துடன் இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி” எனத் தெரிவித்திருக்கிறார். சி.ஆர்.கேசவன் பா.ஜ.க-விலும், தமிழக அரசியலிலும் வலுவான குரலாக இருப்பார் எனக் கருதப்படுகிறது.