மாரியம்மா… மாரியம்மா… யூனிஃபார்மில் போதையில் நடனமாடிய போலீஸ் எஸ்.ஐ சஸ்பெண்ட் – நடந்தது என்ன? | Police SI suspended after dancing in temple festival

Share

அந்த பாடலுக்கு எஸ்.ஐ ஷாஜி மெய்மறந்து நடனமாடியுள்ளார். அவர் வளைந்து நெளிந்து நடனமாடியதை கோயிலில் கூடியிருந்த மக்கள் விசிலடித்து, கைத்தட்டி ரசித்தனர். பாம்புபோன்று வளைந்து நெளிந்து நடனமாடினார் எஸ்.ஐ. மேலும் வடிவேல் போன்று கும்பிட்டும், கையை விரித்து ரவுண்டடித்தும் மெய்மறந்து ஆடினார். போலீஸ் யூனிஃபார்மில் ஆவேசமாக நடனமாடிய சப் இன்ஸ்பெக்டரை ஊர் மக்கள் சமாதானப்படுத்தினர். அதன் பிறகு அவர் அந்த இடத்தை விட்டுச் சென்றுள்ளார். இதை கோயிலுக்குச் சென்ற யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பிவிட்டார்.

கோயில் விழாவில் யூனிஃபார்மில் நடனமாடும் போலீஸ் எஸ்.ஐ ஷாஜி

கோயில் விழாவில் யூனிஃபார்மில் நடனமாடும் போலீஸ் எஸ்.ஐ ஷாஜி

இந்த சம்பவம் குறித்து எர்ணாகுளம் ரேஞ்ச் டி.ஐ.ஜி விசாரணைக்கு உத்தரவிட்டார். எஸ்.ஐ ஷாஜி மது போதையில் பாடலுக்கு நடனமாடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பணியில் இருக்கும்போதே மது போதையில் கோயில் விழாவில் நடனமாடியதற்காக எஸ்.ஐ ஷாஜியை சஸ்பெண்ட் செய்து எர்ணாகுளம் ரேஞ்ச் டி.ஐ.ஜி உத்தரவிட்டார். கோயில் விழாவில் மெய்மறந்து நடனமாடிய எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்ட வீடியோ வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com