ட்விட்டரின் லோகாவாக நாய்க்கு பதில் மீண்டும் குருவியை மாற்றிய எலான் மஸ்க்

Share

வாஷிங்டன்: ட்விட்டரின் லோகாவாக நாய்க்கு பதில் மீண்டும் குருவியை உரிமையாளரான எலான் மஸ்க் மாற்றியுள்ளார். உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு டிவிட்டரை விலைக்கு வாங்கினார். அதனை தொடர்ந்து டிவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் திடீரென டிவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் மாற்றம் செய்தார். நீல நிற பறவைக்கு பதில் மஞ்சள் நிற நாயை லோகோவாக மாற்றினார். ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் படம் லோகோவாக வைக்கப்பட்டது.

டாஜிகாயின் எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் உள்ளது என்று டிவிட்டர் லோகோவை மாற்றி எலான் மஸ்க் மீம்ஸ் மூலம் விளக்கம் அளித்துள்ளார். டிவிட்டர் இணைய தளத்தில் மட்டும்தான் இந்த லோகோ திடீரென மாற்றம் செய்யப்பட்டிருப்பது பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் டிவிட்டர் செயலியில் நீல நிற பறவை லோகோவே இருந்து வந்தது. இந்நிலையில் இது குறித்து தொடர்ந்து விமர்சனம் எழுந்த நிலையில் Dogecoin கிரிப்போ கரன்ஸியின் லோகோவாக இருந்த நாய் படத்தை மஸ்க் மாற்றினார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com