ஐபிஎல் கிரிக்கெட்: அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த வருண் சக்ரவர்த்தி – கொல்கத்தா அசாத்திய வெற்றி

Share

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு,

டுப்ளெஸ்ஸி விக்கெட்டை வீழ்த்தியதைக் கொண்டாடும் வருண் சக்ரவர்த்தி

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், கொல்கத்தாவும் பெங்களூருவும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. ஆனால், பெங்களூரு அணி 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கொல்கத்தா 81 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு அணியிலிருந்து இன்றைய போட்டியின் முதல் ஓவரை வீச வந்த முகமது சிராஜ் 9 ரன்களை கொடுத்தார். கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினார்கள். சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே கொல்கத்தாவின் பவுண்டரிக்கான கணக்கையும் குர்பாஸ் தொடக்கி வைத்தார்.

பவர் பிளேவின்போது சிறப்பான ஷாட்களை அடிப்பதுதான் குர்பாஸின் வலிமை. அதைக் கச்சிதமாகச் செய்துகொண்டிருந்தார். முகமது சிராஜின் பந்துவீச்சை குர்பாஸ் சாமர்த்தியமாகப் பயன்படுத்தினார். அவரது பந்துவீச்சில் ஃபீல்டிங் பகுதிக்கு நடுவே கிடைத்த இடைவெளியில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com