மத்தியப்பிரதேச மாநிலம், பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர், தன் சகோதரனுடனான சண்டையில் செல்போனை விழுங்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணுக்கு வாந்தியும் வயிற்றுவலியும் ஏற்பட்டிருக்கின்றன. இந்தத் தகவலை அறிந்த அவரின் குடும்பத்தார், உடனே அந்தப் பெண்ணை குவாலியரிலுள்ள ஜெய ஆரோக்யா மருத்துவமனைக்கு (ஜேஏஎச்) கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்தால்தான், செல்போனை வெளியே எடுக்க முடியும் எனத் தெரிவித்துவிட்டனர்.
மேலும், அறுவை சிகிச்சைக்காக குவாலியர் மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய மருத்துவமனைக்கு பெண்ணைக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சைக்கான நடவடிக்கையும் வேகமாகத் தொடங்கப்பட்டிருக்கிறது.
இது குறித்துப் பேசிய மருத்துவர்குழு, “பெண்ணுக்குக் கடுமையான வயிற்றுவலி, தொடர்ந்து வாந்தி ஏற்பட்டதால், அவரின் குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர்.