மல்யானா படுகொலைகள் : 36 ஆண்டுகளுக்கு பின் அளிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பால் இஸ்லாமியர்கள் விரக்தி

Share

உத்தர பிரதேசம், முஸ்லிம், கலவரம்

பட மூலாதாரம், MOHAMMED ISMAIL

படக்குறிப்பு,

கலவரத்தில் தனது 11 குடும்ப உறுப்பினர்களையும் பறிகொடுத்த மொஹம்மத் இஸ்மாயில்

36 ஆண்டுகளுக்கு முன்பாக உத்தர பிரதேச மாநிலம், மல்யானா கிராமத்தில் நிகழ்ந்த படுகொலைகள் தொடர்பான வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 41 இந்துக்களையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியுள்ளது விசாரணை நீதிமன்றம். இந்த கலவரத்தில் சிக்கி உயிர் பிழைத்திருப்பவர்களையும், பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களையும் இந்த தீர்ப்பு விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.

1987ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி, உத்தர பிரதேச மீரட் மாவட்டத்தின், புறநகர் பகுதியில் அமைந்துள்ள மல்யானா கிராமத்தில் கலவரம் நடந்தது. ‘பிரவுன்சியல் ஆர்ம்ட் கான்ஸ்டபலரி’ ( Provincial Armed Constabulary – PAC) என்று அழைக்கப்படும் மாகாண ஆயுதப்படை காவலர்களாலும்,இந்து மக்களாலும் இந்த கலவரத்தில் 72 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

`இந்திய ஜனநாயகத்தில் படியப்பட்ட ஒரு கறை` என இந்த கலவரம் குறித்து மக்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த வெள்ளியன்று நடந்த இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அமர்வுகளும், தற்போது வெளியாகியிருக்கும் இந்த தீர்ப்பும்,`நீதித்துறையில் நடந்திருக்கும் ஒரு கேலிகூத்து` என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com