2021-ம் ஆண்டு நிலவரப்படி, 103 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டுகிறது டாடா குழுமம். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள மிகப் பெரிய குழுக்களில் ஒன்றாக உள்ளது. இதன் வருவாயில் 66% டாடா டிரஸ்ட்டுக்கே சென்றடைகின்றன.
கடந்த ஒன்றரை வருடங்களாக ரத்தன் டாடா, இந்தியாவின் அவசரத் தேவைக்காக உதவி வருகிறார். சுகாதார வசதிகள், கல்வி முறையை மேம்படுத்துதல் போன்ற பல விஷயங்கள் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் நிறைய பங்களிப்புகளைச் செய்துள்ளார். அவர் வழியில்தான் அவர் குடும்பமும் செயல்படுகிறது. அதனால் அவர் தனிப்பட்ட நிதிநிலையில் எந்த பாதிப்பும் இருக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
எந்த ஒரு தொழிலதிபருக்கும் இருக்கும் ஆசை, பணக்காரர் பட்டியலில் முதலிடம் பெற வேண்டும் என்பதுதான். ஆனால், டாடா அந்த ரேஸில் தன்னை ஒருபோதும் இணைத்துக் கொள்ளவில்லை.
டாடா குழுமம் உலோகங்கள் மற்றும் சுரங்கம், தகவல் தொழில்நுட்பம், சில்லறை விற்பனை, வாகனம், ரசாயனங்கள், போக்குவரத்து எனக் கிட்டத்தட்ட 29 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களையும் மேலும் பட்டியலிடப்படாத நிறுவனங்களையும் கொண்டுள்ளது.