ஃப்ரூட் மஃபின்ஸ் | Fruit Muffins

Share

தேவையானவை:

மைதா,
சர்க்கரை,
வெண்ணெய் – தலா 1 கப்,
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் – 1 ஸ்பூன்,
முட்டை – 2,
டூட்டி ஃப்ரூட்டி – 2 ஸ்பூன்,
அலங்கரிக்க – பட்டர் கிரீம்.

செய்முறை:

வெண்ணெய், சர்க்கரை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடிக்கவும். முட்டை உடைந்து ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக அடிக்கவும். மைதா, பேக்கிங் பவுடரை கலந்து சலிக்கவும். அடித்த கலவையில் மைதா, பேக்கிங் பவுடர் எசன்ஸ் சேர்த்து பிசையவும். மைதா சேர்ப்பதற்கு முன் வரை நன்றாக அடிக்கவும். பின் அடிக்கக்கூடாது. கடைசியாக டூட்டி ஃப்ரூட்டியைச் சேர்த்து மஃபின் கப்களில் பாதியளவு ஊற்றவும். மைக்ரோவேவ் அவனில் 150 டிகிரி சென்டிகிரேடில் 15 நிமிடம் ப்ரீ ஹீட் செய்து, பின் 165 டிகிரி வெப்ப நிலையில் 20 நிமிடங்கள் வரை பேக் செய்யவும். வெளியே எடுத்ததும் மேலே ஐசிங் கலவையால் டிசைன் செய்து பரிமாறுங்கள்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com