9 லட்சம் ஏக்கர் நிலம் கொண்ட வக்ஃப் – சட்டத் திருத்தத்தால் அரசுக்கு என்ன பலன்?

Share

வக்ஃப் சட்டத் திருத்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன

  • எழுதியவர், இம்ரான் குரேஷி
  • பதவி, பிபிசி இந்திக்காக

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி கட்டத்தில், வக்ஃப் திருத்த மசோதா முதலில் மக்களவையிலும், மறுநாள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலுடன் சட்டமாக அமலுக்கும் வந்துவிட்டது.

வக்ஃப் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம் நீண்ட காலத்துக்கு அரசாங்கத்துக்கு பயனளிக்கும் என்று வழக்கறிஞர்களும் நிபுணர்களும் கூறுகின்றனர்.

நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சிவில் சமூகத்தின் கடுமையான எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நிறைவேற்றிய இந்த திருத்தங்கள் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாவது நிச்சயம்.

இந்த புதிய திருத்தம் அரசியலமைப்பின் பல விதிகளை மீறுவதாக மூத்த வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com