6 engines, 295 coaches, 3.5 km: 6 எஞ்சின்கள், 295 பெட்டிகள், 3.5 கி.மீ : உலகின் மிகப்பெரிய சரக்கு ரயில் `சூப்பர் வாசுகி’ தெரியுமா?

Share

நாட்டில் ரயில் சேவை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ரயில்களில் பண்டிகை காலத்தில் டிக்கெட் எடுப்பது என்பது சவாலான ஒன்றாக இருக்கிறது. இதனால் மக்கள் ஏஜென்டுகளின் துணையை நாடவேண்டிய நிலையில் இருக்கின்றனர். இதே போன்று நாட்டிற்குள் சரக்குகளை எடுத்துச்செல்லவும் சரக்கு ரயில்கள் முக்கியமான பங்கு வகிக்கிறது.

`சூப்பர் வாசுகி’

மகாராஷ்டிராவில் இயக்கப்படும் `சூப்பர் வாசுகி’ என்ற சரக்கு ரயில்தான் உலகிலேயே மிகப்பெரிய ரயிலாக கருதப்படுகிறது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு “ஆஷாதி கா அம்ரித் மஹோத்சவ்’ திட்டத்தின் கீழ் இந்த ரயிலை அறிமுகம் செய்தது. இதில் மொத்தம் 295 ரயில் பெட்டிகள் இருக்கிறது. இதனை 6 ரயில் எஞ்சின்கள் சேர்ந்து இழுத்து வருகிறது.

3.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில் நாக்பூரில் உள்ள அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை எடுத்து வரும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சத்தீஷ்கரில் இருந்து நிலக்கரியுடன் பயணத்தை தொடங்கும் வாசுகி 11.20 மணி நேரத்தில் நாக்பூர் வந்து சேருகிறது. இந்த ரயிலின் ஒரு முனையில் இருந்து அடுத்த முனைக்கு நடந்து செல்வதாக இருந்தால் ஒரு மணி நேரம் பிடிக்கும். அதோடு இந்த ரயில் கிளம்விட்டால் மற்ற ரயில்கள் அனைத்தும் ஒதுங்கி நின்று வழிவிட ஆரம்பித்துவிடும். வாசுகியை வேறு எந்த ரயில் நிலையத்திலும் நிறுத்த முடியாது. பெரும்பாலான ரயில் நிலையத்தில் பிளாட்பார தண்டவாளம் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்தும் வகையில் மட்டுமே கட்டி இருப்பர். ஆனால் சூப்பர் வாசுகி 3.5 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்பதால் வழியில் வேறு எந்த இடத்திலும் அதனை நிறுத்திவிட்டு வேறு ரயில்களுக்கு வழிவிடுவது என்பது சாத்தியம் கிடையாது. வாசுகிக்கு பின்னால் வரும் ரயில் அதனை முந்திச்செல்வது முடியாத காரியம் ஆகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com