50 பந்துகளில் அதிரடி சதம்; விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா | Smriti Mandhana hits century in just 50 balls and breaks virat kohli record

Share

இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 30-ம் தேதி இந்தியா vs இலங்கை போட்டியுடன் தொடங்கவிருக்கிறது.

அதற்கு முன்பாக, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் சொந்த மண்ணில் இந்தியா ஆடி வருகிறது.

இந்தத் தொடரானது இந்திய வீராங்கனைகளுக்கு ஒரு 40 ஆண்டுகளாக வரலாற்றை மாற்றியமைக்கும் அரிய வாய்ப்பு.

அதாவது, 1983 முதல் இதுவரை ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட 10 ஒருநாள் தொடரிலும் இந்தியா தோல்வி மட்டுமே அடைந்திருக்கிறது.

இந்திய மகளிர் அணி

இந்திய மகளிர் அணி
https://x.com/BCCIWomen

இப்படியான சூழலில், இந்தியா vs ஆஸ்திரேலிய 3 போட்டிகள் ஒருநாள் தொடர் செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கியது.

முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்தியா, 17-ம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மீண்டு வந்து வெற்றி பெற்றது.

இதனால், இன்றைய (செப்டம்பர் 20) மூன்றாவது போட்டியானது இந்திய அணிக்கு அரிய வாய்ப்பாக அமைந்தது.

மதியம் தொடங்கிய இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் பெத் மூனி 57 பந்துகளில் அதிரடியாக சதமடிக்க, ஜார்ஜியா வோல், எல்லிஸ் பெர்ரி உறுதுணையாக அரைசதங்கள் அடித்தனர்.

இதனால், 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 412 என்ற ஸ்கோரை எட்டியது ஆஸ்திரேலியா.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com