26 வயதில் புற்றுநோயால் உயிரிழந்த முன்னாள் உலக அழகி போட்டியாளர்… என்ன நடந்தது? | Former Miss World Contestant, Sherika De Armas, Dies At 26

Share

இவர் தலைமுடி பராமரிப்பு தொடர்பான பொருள்களை விற்பனை செய்யும் ஷே டி அர்மாஸ் ஸ்டுடியோ எனப்படும் நிறுவனத்தை நடத்திவந்தார். கொடிய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் பெரெஸ் ஸ்க்ரிமினி அறக்கட்டளையுடன் இணைந்து சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் இருந்து வந்தார். இந்நிலையில்தான் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோய்க்கு கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை ஆகியவற்றை எடுத்து வந்த ஷெரிகா, சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 13-ம் தேதி உருகுவே மருந்துவமனையில் உயிரிழந்துள்ளார். 26 வயதில் இவரின் மறைவு உருகுவே மட்டுமல்லாது உலகத்துக்கே பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இவரது துறையைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் ஷெரிகாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பெண்களுக்கு ஏற்படும் நான்காவது மிகவும் பொதுவான புற்றுநோய். 2018-ம் ஆண்டில் உலகளவில் சுமார் 5,70,000 பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3,11,000 பெண்கள் இந்த நோயால் இறந்துள்ளாதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com