பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹோர்மூஸ் நெருக்கடி அமையுமா? வரலாற்றில் 3 முக்கிய தருணங்கள்
பட மூலாதாரம், BBC/Getty imagesகட்டுரை தகவல்ஒரு மாதத்திற்கு முன்பு இரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் தூண்டப்பட்ட போர், கணிக்க முடியாத தன்மையிலிருந்து கணிக்க முடிவதாக மாறியுள்ளதாக தெரிகிறது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சமூக ஊடகப் பதிவுகள், குறுகிய காலத்திற்காவது, குழப்பத்தை அதிகப்படுத்தி உலகளாவிய சந்தைகளை உலுக்குவதாகத் தோன்றுவதும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால், இந்தப் போரின் போக்கைத் தீர்மானிப்பதில் டிரம்பின் கருத்துகள் மட்டுமே ஒரு காரணியாக இருக்கவில்லை – வரலாறும் ஒரு காரணியாகத் தெரிகிறது.மோதல் தொடங்கிய வாரங்களில், வல்லுநர்கள்…



