“யார் ஹீரோ” மீண்டும் இணையும் ரஜினிகாந்த் , கமல் ஹாசன் – இருவரும் சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல்
பட மூலாதாரம், Red Giant Moviesகட்டுரை தகவல்நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தின் வீடியோ முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கான முன்னோட்ட வீடியோ அந்நிறுவனத்தின் யூடியூப் சானலில் தமிழ் , தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது.கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்குபின் ஒரு படத்தில் இவர்கள் இணைந்து நடிக்கப்போகிறார்கள். தமிழ் சினிமாவின் தலைமுறைகளைத் தாண்டி முன்னணி நட்சத்திரங்களாக இவர்கள் இருவரும் அறியப்படும்…









