வேலூர்: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து – கைதுக்கு பயந்து இளைஞன் தற்கொலை | youth commits suicide after attacking girl student who refused to accept love – shocking incident in vellore
வேலூர் அருகேயுள்ள அரியூர் ஜீவா நகரைச் சேர்ந்த 19 வயது இளைஞன் விக்னேஷ். ப்ளஸ் டூ வரை பயன்ற விக்னேஷ் உயர்க்கல்வியைத் தொடராமலும், வேலைக்குச் செல்லாமலும் வீட்டிலேயே இருந்து வந்தாராம். இந்த நிலையில், தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் 19 வயது மாணவியை விக்னேஷ் ஒருதலையாக காதலித்துவந்ததாக தெரிகிறது. தினமும் மாணவி கல்லூரிக்குச் சென்று திரும்பும்போது தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. நேற்றைய தினமும் வழக்கம்போல் தொரப்பாடி ராம்சேட் நகர் வழியாக கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தார் அந்த மாணவி. அப்போது…



