Daily Archives: January 11, 2026

தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமி; தாத்தா,தாய் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு!

திருச்சி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல் காந்தி, குழந்தைகள் நலக் குழு தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போதுதான், 15 வயது சிறுமிக்கு அவரது உறவினர்களே பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. கரூர் மற்றும் திருச்சியில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது கண்டறியப்பட்டு, 15 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.இது குறித்து, குழந்தைகள் பாதுகாப்பு துறை தரப்பில் விசாரித்தோம்.”கரூர் மாவட்டத்தில் பெற்றோருடன் வசித்து வரும் 15 வயது சிறுமி கடந்த 2021- ம் ஆண்டில்…

அமெரிக்காவின் 500% வரிவிதிப்பு அச்சுறுத்தல்: திருப்பூர் ஆடை உற்பத்தித்துறையின் நிலை என்ன?

கட்டுரை தகவல்இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடந்த ஆண்டில் இருந்து கூடுதல் வரி விதிக்கப்பட்டதால் பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயத்த ஆடை ஏற்றுமதியில் மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஜவுளி துறையினர் கூறுகின்றனர். இந்நிலையில் இந்திய தயாரிப்புகள் மீது 500 சதவிகிதம் வரை வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அமலுக்கு வந்தால் தங்கள் நிலைமை சிக்கலுக்குள்ளாகும் என ஜவுளி உற்பத்தியாளர்கள்…

நோபல் பரிசை பகிர நினைத்த மச்சாடோ- எதிர்ப்பு தெரிவித்த நோபல் கமிட்டி |Machado wanted to share the Nobel Prize – Nobel Committee object

தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அடம் பிடித்துக்கொண்டே இருக்கிறார். அடம் பிடிக்கும் ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்பு கூட வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், ” இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தினேன். என்னை விட அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்குத் தகுதியானவர் இங்கு யாருமில்லை. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எதுவும் செய்ததில்லை. அவருக்கு ஏன் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது” என்று பேசியிருந்தார்.…

‘பராசக்தி’ படத்தில் வரும் மூன்று முக்கிய சம்பவங்கள் உண்மையில் எப்படி நடந்தன?

பட மூலாதாரம், X/Dawn Picturesகட்டுரை தகவல்இன்று (ஜனவரி 10) வெளியாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் 1965ஆம் ஆண்டின் மொழிப் போரை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.மொழிப் போரின்போது நடந்த பல முக்கிய சம்பவங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. அந்தச் சம்பவங்கள் உண்மையில் எப்படி நடந்தன?சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா நடித்து வெளியாகியுள்ளது ‘பராசக்தி’ திரைப்படம். 1965-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்தித் திணிப்புப் போரில் சகோதரனை…