இங்கிலாந்து அணியில் விளையாடுவது என் சிறுவயது கனவு; சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் வோக்ஸ் | Playing for England was my childhood dream; Chris Woakes retires from international cricket
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார்.2011-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிரான தொடரின் (ODI & T20) மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான வோக்ஸ், இதுவரை 122 ஒருநாள் போட்டிகளில் 173 விக்கெட்டுகளும், 33 டி20 போட்டிகளில் 31 விக்கெட்டுகளும், 62 டெஸ்ட் போட்டிகளில் (2013-ல் அறிமுகம்) 192 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.இக்கட்டான சூழல்களில் பேட்ஸ்மேனாகவும் ஜொலித்திருக்கும் வோக்ஸ், மூன்று ஃபார்மெட்டுகளிலும் மொத்தமாக 3,500-க்கும் ரன்கள் குவித்திருக்கிறார்.ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் ஓய்வுபெற்ற பிறகு…









