ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற கபடி வீரர் அபினேஷுக்கு உற்சாக வரவேற்பு | Kabaddi player Abinesh gets a rousing welcome
திருவாரூர்: ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய கபடி அணி வீரர் அபினேஷுக்கு வடுவூரில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கம் வென்றன. இந்திய ஆடவர் அணியில், திருவாரூர் மாவட்டம் வடுவூர் கிராமத்தைச் சேர்ந்த அபினேஷ்(17) இடம் பெற்றிருந்தார். இந்நிலையில், சொந்த ஊரான வடுவூருக்கு நேற்று வந்த அபினேஷுக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த வேனில்…









