அணியில் யார் விளையாடாவிட்டாலும் வெற்றிக்கான வழியை கண்டறிவோம்: காகிசோ ரபாடா
கொல்கத்தா: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியனான தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 15 ஆண்டுகளில் இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்க அணியின் முதல் வெற்றியாக இது அமைந்தது. இந்த போட்டியில் 124 ரன்களையே இலக்காக நிர்ணயித்த போதிலும் சைமன் ஹார்மரின் சுழற்பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்க அணி வெற்றியை வசப்படுத்தி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என…









