Yearly Archives: 2025

Maxwell : “மேக்ஸ்வெல்லை அணியில் எடுப்பது ஆஸ்திரேலியாவுக்குப் பின்னடைவு" – பாண்டிங் சொல்வதென்ன?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, சமீபத்தில் சொந்த மண்ணில் இந்தியாவுடனான பார்டர் கவாஸ்கர் தொடரை 3 – 1 எனக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கிறது.ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிஇந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டதால், இலங்கைக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோற்றாலும் அவர்களுக்குப் பிரச்னையில்லை. இருந்தாலும், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இலங்கை…

கங்குவா ஆஸ்கர் பட்டியலில் இடம் பிடித்தது எப்படி? ஒரு திரைப்படம் ஆஸ்கருக்கு போட்டியிடுவதற்கான வரையறை என்ன?

பட மூலாதாரம், Studio Greenகட்டுரை தகவல்2025ஆம் ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருதுகள் வரும் மார்ச் 2 ஆம் தேதி வழங்கப்பட இருக்கிறது. சமீபத்தில் இந்த விருதுக்கு அனுப்பப்பட்டுள்ள படங்களின் பட்டியல் வெளியானது.சிறந்த படம் (Best Picture) என்ற பிரிவின் கீழ் உலகின் பல்வேறு மொழிகளில் இருந்தும் 323 திரைப்படங்கள் போட்டியிடுகின்றன. இந்த பட்டியலில், தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான ‘கங்குவா’ திரைப்படமும் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இருந்து தேர்வாகும் 10 படங்கள் மட்டும்…

‘நான் இப்போது பகுதி நேர கிரிக்கெட் வீரர்’ – SA 20 லீக்கில் விளையாடும் தினேஷ் கார்த்திக் | Dinesh Karthik says I am a part time cricketer who plays in SA 20 league

கேப் டவுன்: இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக், தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 லீக் கிரிக்கெட்டில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். இதன் மூலம் இந்த லீக்கில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற அடையாளத்தை அவர் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூனில் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். இருப்பினும் எஸ்ஏ20 லீக்கில் விளையாடுவதாக சொல்லி இருந்தார். அதன்படி பார்ல் ராயல்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்தது. இந்த அணி…

அரசு தொடக்கப் பள்ளி டு கோரக்பூர் ஐஐடி இஸ்ரோ தலைவராகும் குமரி விஞ்ஞானி நாராயணன் கடந்துவந்த பாதை | Story of the Isro chairman narayanan

இந்நிலையில் ஐ.எஸ்.ஆர்.ஓ தலைவராக மீண்டும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. விஞ்ஞானி நாராயணனின் தந்தை வன்னிய பெருமாள், தாய் தங்கம்மாள். வன்னியபெருமாள் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். ஏழைகுடும்பத்தைச் சேர்ந்த நாராயணன் கீழ காட்டுவிளை அரசு தொடக்கப் பள்ளியில் படித்தார். ஆதிக்காட்டுவிளை ஊராட்சியில் உள்ள சியோன்புரம் சி.எஸ்.ஐ பள்ளியில் உயர்நிலை படிப்பைத் தொடர்ந்தார். நாகர்கோவில் அருகே உள்ள கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ படித்தார்.  கோரக்பூர் ஐ.ஐ.டி-யில் கிரயோஜனிக் இன்ஜினீயரிங் பிரிவில் எம்.டெக் பயின்று…

Kohli : 'கோலியின் 'Fear of Failure' மனநிலைதான் பிரச்னை' – கமெண்டேட்டர் நானி எக்ஸ்க்ளூஸிவ்

நானி, தமிழ் கிரிக்கெட் வர்ணனையின் மிக முக்கிய குரல். நீண்டகாலமாக கிரிக்கெட் சார்ந்தே இயங்கிக் கொண்டிருப்பவர். பார்டர் கவாஸ்கர் டிராபி முடிந்திருக்கும் சூழலில் பல்வேறு கேள்விகளுடன் அவரை பேட்டிக்காக தொடர்புகொண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு பொறுமையாகவும் விரிவாகவும் அவர் அளித்த நேர்காணல் இங்கே.நானி“பெர்த்தில் முதல் போட்டியை இந்தியா வென்றிருந்த போது ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியுமே பதற்றத்தில் இருந்தது. சீரிஸூம் இந்தியாவின் கையில்தான் இருந்தது. அப்படியொரு நிலையிலிருந்து இந்தியா எப்படி கோட்டை விட்டது?”“முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியே கொஞ்சம் அலட்சிய…

OYO: திருமணமாகாத ஜோடிகளுக்கு அறை கிடைக்காதா? – புதிய விதி கூறுவது என்ன?

பட மூலாதாரம், OYOகட்டுரை தகவல்எழுதியவர், கோட்டேரு ஸ்ராவனி பதவி, பிபிசி செய்தியாளர்8 ஜனவரி 2025, 05:36 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஹோட்டல் ரூம்களை ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யும் வசதியை அளிக்கும் நிறுவனமான ஓயோ (OYO), தனது கூட்டாளி ஹோட்டல்களுக்கு புதிய செக்-இன் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய கொள்கையின்படி, ஓயோ அறையை ஆன்லைனில் முன்பதிவு செய்ய விரும்பும் ஜோடிகள், முன்பதிவு செய்யும் போதும், அறையில் வந்து தங்கும்போதும் (Check-in.) தங்களுடைய திருமண உறவை உறுதி செய்யும்…

‘பும்ராவை சீண்டியது நான் தான்’ – தவறை ஒப்புக்கொண்ட ஆஸி. வீரர் சாம் கான்ஸடாஸ் | fault was mine australia player Sam konsatas on bumrah incident

சிட்னி: இந்திய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் பும்ராவை தான் சீண்டியதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார். சிட்னி போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிய சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே எஞ்சியிருக்க இந்த சம்பவம் நடந்தது. பும்ரா மற்றும் சிராஜ் பந்து வீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான உஸ்மான் கவாஜாவும், சாம் கான்ஸ்டாஸும் தடுமாறினர். அப்போது பும்ரா பந்து வீச ஆயத்தமானார். அந்த சூழலில் கவாஜா…

Hansika Motwani:`குடும்ப வன்முறை’ – ஹன்ஸிகா மோத்வானி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல்துறை! | Hansika Motwani’s sister-in-law files FIR against her family

மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலக்கு அறிமுகமான நடிகை ஹன்ஸிகா மோத்வானி. அதைத் தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடித்து தனக்கான ரசிகர் வட்டத்தை அமைத்துக் கொண்டவர். இவருடைய சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும், தொலைக்காட்சி நடிகையான முஸ்கன் நான்சி ஜேம்ஸ் என்பவருக்கும் 2020-ல் திருமணம் நடந்தது. ஆனால் 2022-ல் இருவரும் பிரிந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தனித் தனியே வாழ்கின்றனர். இந்த நிலையில், மும்பையில் உள்ள அம்போலி காவல் நிலையத்தில் டிசம்பர் 18, 2024 அன்று பாரதிய…

Team India: “சூப்பர் ஸ்டார் மனப்பான்மையிலிருந்து இந்திய அணி வெளிவர வேண்டும்” – ஹர்பஜன் சிங் ஆதங்கம்| Harbhajan Singh says India should leave behind the superstar attitude

யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய ஹர்பஜன் சிங், “கடந்த ஆறு மாதங்களில் இலங்கையிடம் தோற்றோம். நியூசிலாந்திடம் ஒயிட்வாஷ். இப்போது ஆஸ்திரேலியாவில் 1 – 3 எனத் தோல்வியடைந்தோம். ராகுல் டிராவிட் இருந்தவரைக்கும் எல்லாம் சரியாக இருந்தது. இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. ஆனால், திடீரென என்ன ஆனது? ஒவ்வொரு வீரருக்குமே நற்பெயர் இருக்கிறது. அதுதான் விஷயமென்றால், கபில் தேவ், அனில் கும்ப்ளே அல்லது இந்திய அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னர்களாக இருந்தவர்களை சேர்க்கவும். பிசிசிஐ மற்றும் அணி…

1 345 346 347 348 349 355