Yearly Archives: 2025

ஐசிசி பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 907 புள்ளிகளை குவித்து பும்ரா அசத்தல் | Bumrah scores 907 points in ICC bowlers rankings

துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 907 புள்ளிகளை குவித்து முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். இந்திய பந்துவீச்சாளர்களில் இதற்கு முன்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் 904 புள்ளிகளை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. இதனை தற்போது பும்ரா முறியடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்பர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக 904 புள்ளிகள் சேர்த்து அஸ்வினின் சாதனையை பும்ரா சமன் செய்திருந்தார்.…

பழனி: பூட்டி கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறை; அவதிக்குள்ளாகும் மகளிர்- நடவடிக்கை எடுக்கப்படுமா?

பழனி வ. உ. சி. மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையானது கடந்த சில மாதங்களாக பூட்டிய நிலையில் மட்டுமே இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் இந்த அறையின் முன்பு சிலர் குடித்துவிட்டு படுத்து உறங்குகின்றனர். மது பாட்டில்களையும் ஆங்காங்கே வைத்துவிட்டுச் செல்கின்றனர். முகம் சுளிக்கும்படியான போதை ஆசாமிகளின் செயல்கள் பெண்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் இந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையானது திறக்கப்பட்டாலும் இங்கே வருவதற்கு பெண்கள் அச்சப்படுவார்கள். எனவே முதலில் பாதுகாப்பான சூழலை…

Magnus Carlsen: FIDE விதி தளர்வால் கிடைத்த வாய்ப்பு… சாம்பியன் பட்டத்தைப் பகிர்ந்த கார்ல்சன்! | Magnus Carlsen and Ian Nepomniachtchi share the World Blitz Chess Championship title

இறுதியில், இருவரும் சாம்பியன் பட்டதைப் பகிர்ந்து கொள்ளலாம் என இயன் நெபோம்னியாச்சியிடம் கார்ல்சன் முன்மொழிந்தார். அதையடுத்து, நடுவர்கள் அந்த முன்மொழிவை ஏற்று, 2024 பிளிட்ஸ் செஸ் சாம்பியன்களாக இருவரையும் அறிவித்தனர். இதன்மூலம், பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில், முதல்முறையாக சாம்பியன் பட்டம் பகிர்ந்துகொள்ளப்படும் முதல் நிகழ்வாக இது அமைந்தது. இருப்பினும், பலரும் இதனை விமர்சித்துவருகின்றனர்.மேக்னஸ் கார்ல்சன் – இயன் நெபோம்னியாச்சிகுறிப்பாக, அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹான்ஸ் நீமன் (Hans Niemann), “சதுரங்க உலகம் அதிகாரப்பூர்வமாக நகைச்சுவையாக இருக்கிறது. வரலாற்றில்…

ஸ்லீப் விவாகரத்து: ஒரே அறையில் ஒன்றாக தூங்க விரும்பாத மில்லினியல் தம்பதியர் – என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, அமெரிக்காவில் மூன்றில் ஒரு பகுதியினர் அவ்வப்போது துணையிடம் இருந்து விலகி தனித்தனி அறைகளில் தூங்குவதாக ஒரு ஆய்வு கூறுகிறதுகட்டுரை தகவல்எழுதியவர், ஃபெர்னாண்டா பால் பதவி, பிபிசி உலக சேவை 1 ஜனவரி 2025, 05:06 GMTபுதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்இவை அனைத்தும் கோவிட் பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு தொடங்கின.குறட்டைச் சத்தம் தாங்க முடியாமல் சிசிலியா* தூங்கவில்லை. கணவர் குறட்டை விடுவதனால், அந்தச் சத்தத்தில் இருந்து தப்பிக்க, தனது கணவரைத் திருப்பிப் படுக்க…

கார்ல்சனுக்கு ஜீன்ஸால் வந்த சோதனை! | about magnus carlsen jeans pant issue

செஸ் விளையாட்டில் முன்னணி வீரர் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன். ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இவர் அண்மையில் நடைபெற்ற செஸ் போட்டி ஒன்றுக்கு ஜீன்ஸ் அணிந்து வந்தது சர்ச்சையானது. நியூயார்க்கில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கு ஜீன்ஸ் அணிந்து வந்த கார்ல்சனுக்கு ஃபிடே அமைப்பு அபராதம் விதித்து, ஜீன்ஸ்சை மாற்றிவிட்டு போட்டியில் கலந்து கொள்ளுமாறு வார்னிங் தந்தது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்து தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார் கார்ல்சன். இதையடுத்து, ‘ஜீன்ஸ் உடைக்கும்…

“60 லட்சம் பேர் காத்திருக்கும்போது, 10,000 பேருக்கு மட்டும் அரசு வேலை” – திமுகவிற்கு ராமதாஸ் கண்டனம் | pmk ramadoss released a statement about government jobs in tamilnadu by dmk

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 34,384 பேருக்கு மட்டும் தான் அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்குப் பிந்தைய மூன்றாண்டுகளில் வழங்கப்பட்ட பணிகளையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை 40,000 என்ற அளவை எட்டக்கூடும். இதுதவிர 33,655 பேருக்குத் தற்காலிக அரசு வேலை வழங்கப் பட்டுள்ளன. எப்படிப் பார்த்தாலும் தமிழ்நாட்டு இளைஞர்களின்…

Nitish Kumar Reddy: “பாண்டியாவை விட நிதிஷ் சிறந்தவர்” – அணியில் எதற்கென்று கேட்ட கவாஸ்கர் புகழாரம்! | nitish kumar reddy better than hardik pandya sunil gavaskar praises

அந்த கேள்விகளுக்கெல்லாம், தனது ஆட்டத்தால் நிதிஷ் குமார் ரெட்டி பதிலளித்து வருகிறார். இந்த நிலையில், முதல் டெஸ்டில் நிதிஸ் குமார் ரெட்டியை ஏன் எடுத்தீர்கள் என்று கேள்வியெழுப்பிய கவாஸ்கர், தற்போது அவரை ஹர்திக் பாண்டியாவுடன் ஒப்பிட்டு புகழாரம் சூட்டியிருக்கிறார்.சுனில் கவாஸ்கர் ஸ்போர்ட்ஸ்டார் (Sportstar) இதழில் ஒரு கட்டுரையில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா இல்லாததிலிருந்து அவரது இடத்துக்கு ஒரு ஆல்ரவுண்டரை இந்தியா தேடிவருகிறது. அதில், நிதிஷ் குமார் ரெட்டி, பந்துவீச்சில் ஓரளவுக்கு கைகொடுத்தாலும், ஒரு பேட்ஸ்மேனாக பாண்டியாவை…

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: எஃப்.ஐ.ஆர் வெளியான விவகாரத்தின் பின்னணி என்ன?

படக்குறிப்பு, ‘பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் அடையாளங்களை வெளியிடக் கூடாது’ என சட்டம் இருக்கும்போது, மாணவி தொடர்பான விவரங்கள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கட்டுரை தகவல்அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ‘தொழில்நுட்ப பிரச்னையால் முதல் தகவல் அறிக்கை கசிந்திருக்கலாம்’ என தேசிய தகவல் மையம் (NIC) இமெயில் மூலம் தெரிவித்துள்ளது.’இந்திய தண்டனைச் சட்டத்தில் இருந்து பிஎன்எஸ் சட்டத்துக்குப் பிரிவுகளை மாற்றும்போது இந்த தவறு நேர்ந்திருக்கலாம்’ என என்ஐசி கூறியுள்ளது.’மாநில அரசுக்கும் எஃப்.ஐ.ஆர் கசிந்த விவகாரத்துக்கும் எந்தத்…

‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் இளம் வயதில் 150 ரன்களுக்கு மேல் விளாசி ஆயுஷ் மகத்ரே சாதனை | Ayush Mhatre breaks Yashasvi Jaiswal record for youngest to hit 150-plus

Last Updated : 01 Jan, 2025 12:44 AM Published : 01 Jan 2025 12:44 AM Last Updated : 01 Jan 2025 12:44 AM விஜய் ஹசாரே டிராபி தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை – நாகலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 403 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான ஆயுஷ் மகத்ரே 117 பந்துகளில்,…

ஒன் பை டூ

எஸ்.ஏ.எஸ்.ஹபீசுல்லா, செய்தித் தொடர்பு துணைச் செயலாளர், தி.மு.க“முழுக்க முழுக்க உண்மை. இதுநாள் வரையிலும், ‘தேர்தல் நடத்தை விதிகள் 1961, விதி 93 (2) (ஏ)-ன்படி, சிசிடிவி காட்சிகள் உட்பட தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகவோ, நீதிமன்றங்கள் மூலமாகவோ ஆணையத்திடமிருந்து பொதுமக்களால் கேட்டுப் பெற முடியும். ஆனால், சமீபத்தில் பாசிச பா.ஜ.க அரசு தேர்தல் நடத்தை விதி 93 (2) (ஏ) – வில், ஒரு சட்டத்திருத்தத்தைச் செய்துவிட்டது. இனி தேர்தல்…