கண்ணதாசன் பிறந்த நாள்: தமிழ் சினிமாவில் கண்ணதாசன் எழுதிய சிறந்த 16 பாடல்கள் என்ன?
பட மூலாதாரம், Gandhi Kannadhasan/Facebookகட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ் 24 ஜூன் 2025, 09:16 GMTபுதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கிய கண்ணதாசனின் பிறந்த நாள் இன்று. 1949ஆம் ஆண்டில் வெளிவந்த கன்னியின் காதலி படத்தில் துவங்கி, 1982ல் வெளிவந்த மூன்றாம் பிறை திரைப்படம் வரை சுமார் 4,500 பாடல்களை எழுதிக் குவித்தவர் கண்ணதாசன்.சினிமாவுக்காக அவர் எழுதிய பாடல்களில் காலத்தை வென்று…









