Asia Cup 2025: பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ் – நடந்தது என்ன?
துபாய் சர்வதேச மைதானத்தில் ஆசியக் கோப்பை 2025-க்கான இந்தியா – பாகிஸ்தான் லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் மைதானத்தை நிரப்பியுள்ளனர். இரண்டு கேப்டன்களுக்கும் உற்சாகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் டாஸின்போது வழக்கமான செயல்முறையின்படி இருவரும் கைகொடுத்துக்கொள்ளவில்லை. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா இருவரும் தங்களது அணியினரின் பட்டியலை நடுவரிடம் கொடுத்துவிட்டு, வர்ணனையாளர் ரவி சாஸ்திரியிடம் பேசிவிட்டு உடை மாற்றும் அறைக்குச் சென்றுள்ளனர்.Team…









