‘தந்தையைப் பழிவாங்க 5 வயது மகன் கடத்தல்’ – அன்னூர் போலீசாரிடம் அசாம் கும்பல் சிக்கிய பின்னணி
பட மூலாதாரம், Annur Policeகட்டுரை தகவல்’தங்களின் ஐந்து வயது மகனைக் காணவில்லை’ என, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இம்ரான்-பர்வீன் தம்பதி கோவை, அன்னூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தபோது டிசம்பர் 25-ஆம் தேதி நேரம் மாலை 7.30 மணி.’சம்பள பாக்கியைத் தரவில்லை’ எனக் கூறி மகனைக் கடத்தியதோடு தனது செல்போனையும் சிலர் எடுத்துச் சென்றுவிட்டதாக டிசம்பர் 25-ஆம் தேதி அளித்த புகார் மனுவில் இம்ரான் கூறியிருந்தார்.”குழந்தைக் கடத்தல் என்றவுடன் எங்களுக்குப் பதற்றம் ஏற்பட்டது. கேரள போலீசின் உதவியோடு புகார்…





