பெண்ணின் கண் இமைகளில் 250 பேன்கள் – அரிய பிரச்னையை மருத்துவர்கள் கண்டுபிடித்தது எப்படி?
பட மூலாதாரம், Suppliedகட்டுரை தகவல்எழுதியவர், அபூர்வா அமீன்பதவி, பிபிசி குஜராத்தி7 நவம்பர் 2025, 15:41 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் சவர்குண்ட்லாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தனித்துவமான மற்றும் அரிதான பிரச்னை ஒன்று அண்மையில் பதிவாகியுள்ளது.சூரத்தை சேர்ந்த 66 வயதான கீதாபென்னுக்கு சில மாதங்களாக கண் இமைகளில் கடுமையான வலியும் அரிப்பும் இருந்தது. கண்கள் சிவந்திருந்தன, அவரால் தூங்கவும் முடியவில்லை.கண் மருத்துவரை அணுகியபோது, கண் இமைகளில் உயிருள்ள பூச்சிகள் இருப்பது…

