Siraj: "ஒரு மேட்ச்சில் ஹீரோ, அடுத்ததில் ஜீரோ" – தோனி சொன்ன அந்த அட்வைஸ்!
இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், சர்வதேசப்போட்டிகளில் விளையாடத் தொடங்கிய காலகட்டத்தில் தோனி வழங்கிய குட்டி அறிவுரை, எப்படி அவர் வெற்றியிலும் தோல்வியிலும், அதிக விமசர்சனங்களையும் பாராட்டுகளையும் எதிர்கொள்ளும்போது பணிவாக இருக்கக் கற்றுத்தந்தது எனக் கூறியிருக்கிறார். siraj இன்று இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளராகத் திகழும் சிராஜ் அவரது கரியரின் ஆரம்பகாலத்தில் அதிகம் நகைக்கப்பட்டார். குறிப்பாக 2018ம் ஆண்டு ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக விளையாடியபோது அதிகப்படியான ட்ரோல்களை எதிர்கொண்டார். சிலர் அவரது தந்தையின் தொழிலை வைத்துகூட கேலி செய்தனர்.இவற்றை எதிர்கொண்டது…









