குகேஷைப் போல கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ஏன் கோடிகளில் பரிசுத்தொகை வழங்கவில்லை? – அரசு வட்டாரங்கள் சொல்வதென்ன? |Why No Crore Reward for Kannagi Nagar’s Karthika Like Gukesh? – Government Sources Explain
இதில் இன்னொரு தரப்பு கருத்து இருப்பதையும் அறிய முடிகிறது. தமிழக அரசு வயதின் அடிப்படையிலும், போட்டியின் தன்மையின் அடிப்படையிலும் இந்தத் தொடர்களில் வெல்வோருக்கு இவ்வளவு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கொள்கை முடிவே வைத்திருக்கிறது. அதன்படி ஆசிய அளவில் தங்கம் வெல்லும் இளையோருக்கு 15 லட்ச ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். கார்த்திகாவுக்கு அதைவிட அதிகமாக 10 லட்ச ரூபாயைச் சேர்த்து 25 லட்ச ரூபாயை தமிழக அரசு வழங்கியிருக்கிறது. கார்த்திகாவின் வெற்றிக்கு ஏற்ற நியாயமான ஊக்கத்தொகையே வழங்கப்பட்டிருக்கிறது எனச்…








