Daily Archives: September 6, 2025
INDvs AUS: இந்திய ‘ஏ’ அணியை அறிவித்த பிசிசிஐ – கேப்டனாகும் shreyas iyer
2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய டி20 அணியில் இடம்பிடிக்கத் தவறிய ஸ்ரேயஸ் ஐயர், அடுத்த வாரம் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா “ஏ’ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா ஏ அணிக்கெதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி வருகிற 16-ம் தேதி லக்னோவில் தொடங்க…
இந்தியா – அமெரிக்கா நல்லுறவு மீண்டும் மலருமா? மோதி பற்றி டிரம்ப் கூறியது என்ன?
பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, தன்னை புகழ்ந்து பேசிய டிரம்புக்கு பதிலளித்துள்ளார் மோதி6 செப்டெம்பர் 2025, 06:03 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்தியா – அமெரிக்கா உறவு டிரம்பின் வரிக்கு வரி யுத்தத்தால் சமீப நாட்களில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.நேற்றைய தினம், இந்தியா மற்றும் ரஷ்யாவை சீனாவிடம் இழந்துவிட்டோம் என தனது ட்ரூத் சோசியல் தளத்தில் டிரம்ப் தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டிரம்பிடம் இந்திய-அமெரிக்க உறவுகள் பற்றிய கேள்வி முன்வைக்கப்பட்டது.அதற்கு “நான் எப்போதும்…
ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட்டுடன் கதை முடியவில்லை… போராடி மீண்டெழும் அன்ஷுல் காம்போஜ் | The story with the Old Trafford Test did not work out – Anshul Kamboj struggles to recover
சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 4வது டெஸ்ட் போட்டியில் தேவையில்லாமல் அணியில் சேர்க்கப்பட்ட அன்ஷுல் காம்போஜ், பாஸ்பால் இங்கிலாந்திடம் சிக்கி சின்னாபின்னமாகி முதல் டெஸ்ட்டிலேயே சரியான பாடம் கற்று கொண்டார். 18 ஓவர்களில் 89 ரன்களைக் கொடுத்து பென் டக்கெட் தூக்கிக் கொடுத்த ஒரே விக்கெட்டுடன் முடிந்தார். சரி இத்துடன் அவர் டெஸ்ட் வாழ்க்கை முடிந்தது என்றுதான் அப்போது பலரும் கருதினர். ஆனால் மீண்டு எழுவேன் என்று அவர் கடும் முயற்சியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.…
Edappadi palanisamy: “எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் நின்று வெற்றி பெற்ற ஒரே தொகுதி என்றால் அது ஆண்டிபட்டி” – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
சுற்றுப்பயணத்தின் முதலாவதாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி மக்களிடையே பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஆண்டிபட்டி தொகுதி இரண்டு முதலமைச்சர்களை உருவாக்கிய தொகுதி. முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் நின்று வெற்றி பெற்ற ஒரே தொகுதி என்றால் அது ஆண்டிபட்டிதான். விவசாயிகள் நிறைந்த தொகுதி.திமுக ஆட்சிக்கு வந்து 51 மாதமாகிறது இந்த தொகுதிக்கு ஏதாவது திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்களா? ஆனால் அதிமுக அப்படியல்ல. 2021ல் விவசாயிகளுக்காக பயிர்க் கடன் ரத்து செய்திருக்கிறோம், சொட்டு…
dhoni; yograj singh; தோனி, கபில் தேவ் ஆகிய முன்னாள் கேப்டன்களை யோகராஜ் சிங் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இன்சைட் ஸ்போர்ட் ஊடகத்திடம் பேசியிருக்கும் யோகராஜ் சிங், “இது இர்ஃபான் பதான் பற்றியது மட்டுமல்ல. கம்பீர் இதுபற்றி பேசியிருப்பதைப் பார்த்திருக்கிறீர்கள்.சேவாக் அதை வெளிப்படையாகவே சொன்னார். தான் எப்படி ஈயைப் போல அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறித்து ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார்.தோனி ஏன் அப்படிச் செய்தார் என்பது குறித்து ஒரு நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும்.யோகராஜ் சிங்அதேசமயம், தோனி பதிலளிக்க விரும்பவில்லை. ஒருவர் பதிலளிக்க விரும்பவில்லை எனில் குற்ற உணர்ச்சி இருக்கிறது.பிஷன் சிங் பேடி, கபில்தேவ், தோனி ஆகியோரைப்…
அதிமுக: எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்ததன் பின்னணியில் பாஜகவா? முழு விவரம்
கட்டுரை தகவல்தேர்தலில் வெல்லவேண்டுமானால் அ.தி.மு.கவிலிருந்து பிரிந்து சென்றவர்களை கட்சிக்குள் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் அக்கட்சியின் மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன். இதன் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக தமிழக காங்கிரஸ் கூறுகிறது. பா.ஜ.க. சொல்வது என்ன?மனம் திறந்த செங்கோட்டையன்வெள்ளிக்கிழமையன்று காலையில் கோபிச்செட்டிப்பாளையத்தில் தொண்டர்களையும் செய்தியாளர்களையும் சந்தித்த அ.தி.மு.கவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், “கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும். அப்போதுதான் வரும் தேர்தல்களில் கட்சியால் வெற்றிபெற முடியும். பத்து…
ஹாக்கியில் இந்தியா வெற்றி! | indian women team won in hockey
ஹாங்சோ: சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நேற்று தாய்லாந்துடன் மோதியது. இதில் இந்திய அணி 11-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் உதிதா துஹான், டங்க் டங்க் ஆகியோர் தலா 2 கோல்களை அடித்தனர். மும்தாஜ் கான், சங்கீதா குமாரி, நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி, தவுடம் சுமன்…
எலி கடித்து இறந்த குழந்தைகள்: “இந்தூரில் நடந்தது விபத்து அல்ல கொலை..!" – அரசை விமர்சிக்கும் ராகுல்
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரின் மகராஜா யஸ்வந்த்ராவ் மருத்துவமனையின் (MYH) தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகளை விரல், தலை, தோள்பட்டை பகுதியில் எலிகள் கடித்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன. இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த MYH துணை கண்காணிப்பாளர் டாக்டர் ஜிதேந்திர வர்மா, “பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையின் எடை வெறும் 1.6 கிலோ மட்டுமே இருந்தது.எலி கடிபல பிறவி குறைபாடுகள் உட்பட குடல் பிரச்னைகளும்…
BCCI: ரூ.3.17 கோடியிலிருந்து 3.50 கோடி – ஸ்பான்ஷர்ஷிப் கட்டணத்தை உயர்த்திய பிசிசிஐ
டிரீம் 11 (Dream 11) நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்த நிலையில் ஸ்பான்ஷர்ஷிப் கட்டணத்தை பிசிசிஐ உயர்த்தி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டு 358 கோடி ரூபாய்க்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக ஒப்பந்தம் மேற்கொண்டது.மொத்தம் 3 ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்றத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இணையவழி விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.Dream 11இணையவழி பண…









