'அடுத்து ஆசியக்கோப்பைல ஆடனும்!' – இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வான அரியலூர் கார்த்தி
அரியலூரை சேர்ந்த ஹாக்கி வீரர் கார்த்தி செல்வம், எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணிக்கு தேர்வானார். கார்த்தியின் பின்னணியை பற்றி அறிந்த முதல்வர் ஸ்டாலின், அவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து வீடு வழங்கியிருந்தார். கார்த்தி செல்வமும் அட்டாக்கிங் வீரராக இந்திய அணியில் சிறப்பாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். ஆனால், திடீரென அணியிலிருந்து டிராப் செய்யப்பட்டார்.Karthi Selvamகடைசியாக 2023 இல் சென்னையில் நடந்த ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் ஆடியிருந்தார். அதன்பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவே…