Daily Archives: July 24, 2025

கோவை: 278 கிலோ காலாவதியான பேரிச்சம் பழம் விவகாரம் – பிளிப்கார்ட் நிறுவனம் விளக்கம்

எங்களின் அனைத்து மையங்களில் நடைபெறும் உணவு பாதுகாப்பு தணிக்கைக்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கிறோம். பொதுவாக காலாவதியான உணவுப் பொருள்களை தரச் சோதனை செய்து அடையாளம் காண்பதற்காக தனியாக பிரித்து வைப்போம்.பிளிப்கார்ட் பேரிச்சம் பழம்இந்த பேரிச்சம் பழமும் அப்படி வைக்கப்பட்டது தான். அந்த பேரிச்சை விற்பனைக்காக வைக்கப்படவில்லை. எங்களுக்கு வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மட்டுமே முதன்மையானது.” என்று கூறியுள்ளனர். Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம்,…

Azhapula: "வீர சகாவே… வீர சகாவே" – வி.எஸ்., இறுதிச்சடங்கில் முழக்கமிட்ட 1-ம் வகுப்பு மாணவி!

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் வி.எஸ் அச்சுதானந்தன் கடந்த திங்கட்கிழமை காலமானார். சிபிஎம்-ன் நிறுவனத் தலைவரான வி.எஸ்., உடல் புதன்கிழமை ஆலப்புழாவில் உள்ள வலியாச்சுடுகாட்டில் உள்ள தியாகிகள் தூணில் முழு அரசு மரியாதையுடன், முழு துப்பாக்கி வணக்கம் உட்பட தகனம் செய்யப்பட்டது.வி.எஸ்., அவரது இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் மாநிலம் முழுவதிலுமிருந்து வந்து கனமழையையும் பொருட்படுத்தாமல் கலந்துகொண்டனர். தலைநகரிலிருந்து சுடுகாடு வரை ‘கண்ணே கரலே வியாசே’ என்ற முழக்கம் நிறைந்திருந்தது.அந்த வகையில், பரவூர் என்ற…

Pant: `காயத்துடன் களமிறங்கும் ரிஷப் பண்ட்; ஆனால் கீப்பிங் மட்டும்…" – BCCI கொடுத்த அப்டேட்

இங்கிலாந்து இந்தியா இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்றைய (ஜூலை 23) தினம் மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்கியது. போட்டியின்போது பேட்டிங் விளையாடிய இந்திய துணை கேப்டன் ரிஷப் பண்டுக்கு காலில் காயம் ஏற்பட்டது. கிறிஸ் வோக்ஸ் போட்ட பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் பந்து இன்சைட்-எட்ஜ் ஆகி அவரது வலது காலை தாக்கியது.அந்த பந்து மைதானத்தில் இரத்தம் வருமளவு பலத்த காயத்தை ஏற்படுத்தியது.மைதானத்தில் கொடுக்கப்பட்ட பிஸியோ சிகிச்சை பலனளிக்காததால் பண்ட் வாகனத்தில் மைதானத்திலிருந்து…

திருப்பூர்: பட்டியல் சாதி திருமணங்களுக்கு மண்டபங்கள் மறுக்கப்படுகிறதா? பிபிசி கள ஆய்வு

படக்குறிப்பு, சிவன் மலை பகுதியில் உள்ள மண்டபங்கள் பட்டியலின மக்களுக்கு மறுக்கப்படுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.கட்டுரை தகவல்காங்கேயம் அருகே சிவன் மலையைச் சுற்றியுள்ள பெரும்பாலான திருமண மண்டபங்கள், பட்டியலின மக்களுக்கு வாடகைக்குக் கொடுக்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்த உண்மையை அறிய வாடிக்கையாளர் போர்வையில் பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது, குறிப்பிட்ட சில திருமண மண்டபங்கள் பட்டியலின மக்களுக்கு மறுக்கப்படுவது உண்மை என்பதும், இந்தப் புகார் மீதான விசாரணைக்குப் பிறகு, சாதியின் அடிப்படையில் மண்டபம் வழங்க மறுப்பு…

எலும்பு முறிவால் ரிஷப் பந்த் விலகல்: இங்கிலாந்து தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவு | Rishabh Pant out due to fracture: India’s setback in England series

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாதத்தில் அடி வாங்கிய ரிஷப் பந்த் எலும்பு முறிவு காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார். உண்மையில், இன்னும் இந்த டெஸ்ட் போட்டியில் 4 நாட்கள் இருக்கும் போதும், கடைசி டெஸ்ட் போட்டி என்பது மிக முக்கியமான போட்டியாக இருக்கும்போதும் இந்திய அணிக்கு இது ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டெஸ்ட்டில் கையில் அடிபட்டு ஆட முடியாமல் தவித்தார். இந்த டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் வீசிய…

Food: வெள்ளை நிற உணவுகளுக்கும் வெல்கம் சொல்வோம்..!

வெள்ளை நிற உணவுகள் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் என்கிற எண்ணத்தில் அவற்றை ஒட்டுமொத்தமாக ஒதுக்கத் தொடங்கிவிட்டனர் பலர். ஆனால் உண்மை என்னவென்றால், எல்லா வெள்ளை நிற உணவுகளும் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிப்பதில்லை. வெள்ளைச் சர்க்கரை, தீட்டிய அரிசி போன்ற உணவுப்பொருள்கள் தீங்கு விளைவிக்கும் என்பதை மறுக்க முடியாது. அதேநேரம் சில அத்தியாவசியமான சத்துகள் இயற்கையாகக் கிடைக்கும் வெள்ளை நிற உணவுகளில்தான் நிறைவாக உள்ளன. அப்படிச் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்.. நன்றி

விமானப் பயணத்தில் செல்போனை Airplane Modeல் வைப்பது ஏன் அவசியம்? விமானியின் விளக்கம்

விமானப் பயணத்தின்போது செல்போன்களை ஏரோபிளேன் மோடில் வைப்பது மிகவும் முக்கியமானது என ஒரு விமானி தெளிவாக விளக்கியுள்ளார். விமானி ஒருவர் டிக்டாக்கில் இதுகுறித்து பதிவு செய்திருக்கிறார். சொல்போனை ஏரோபிளேன் மோடில் வைக்க வேண்டும் என்பது மிக அவசியமான ஒன்று தான், பயணிகளின் பாதுகாப்பிற்கு இது அவசியமானது என்று கூறியுள்ளார். சமீபத்தில் விமானத் துறையில் ஏற்பட்ட இயக்க மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு மத்தியில், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.செல்போனை ஏரோபிளேன் மோடில் வைக்காவிட்டால் என்ன…

உலகக்கோப்பை செஸ் தொடரில் சாதிக்கும் இந்திய இளம் வீராங்கனை – முழு விவரம்!

தலைசிறந்த போட்டியாளர்கள் ஆடும் அந்த கேண்டிடேட்ஸ் தொடரை வெல்பவர்தான் உலக சாம்பியன் போட்டியில் ஆட முடியும். அதனால்தான் கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதிபெறுவது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. திவ்யா தேஷ்முக்குக்கு வயது 19 தான். உலகத் தரவரிசையில் 18 வது இடத்தில் இருக்கிறார். இந்த உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனையான தான் ஷாங்யிக்கு எதிராக திவ்யா மோதியிருந்தார். சீன வீராங்கனை அனுபவமிக்கவர். அவருக்கு எதிராக திவ்யா கொஞ்சம் பலவீனமான போட்டியாளராகத்தான் பார்க்கப்பட்டார். ஆனால், சிறப்பாக ஆடி இந்தப்…

IND Vs ENG: நிரூபித்த சாய் சுதர்சன் – ரிஷப் பந்த் காயத்தால் இந்தியாவுக்குப் பின்னடைவா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ரூட் பந்தில் ஒரு அட்டகாசமான கவர் டிரைவை அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை எட்டினார்.கட்டுரை தகவல்இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நான்காவது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 23) மான்செஸ்டரில் ஆரம்பமானது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் எப்படி இருந்தது? சமீப காலத்தில் இப்படி ஒரு அட்டகாசமான டெஸ்ட் தொடர் நடந்ததாக நினைவில்லை. ஆஷஸ் தொடருக்கு இணையான பரபரப்போடு ஒவ்வொரு…

மான்செஸ்டர் டெஸ்டில் இந்திய அணி நிதானமான ஆட்டம்! | team india plays slow game in Manchester Test versus england

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது. மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் ஷோயிப் பஷிருக்கு பதிலாக லியாம் டாவ்சன் இடம் பெற்றார். இந்திய…