Anshul Kamboj; Shubman gill; இங்கிலாந்துக்கெதிரான 4வது டெஸ்ட் போட்டியில் அன்ஷுல் கம்போஜ் அறிமுக வாய்ப்பிருக்கிறது என கில் ஹின்ட் கொடுத்திருக்கிறார்.
இங்கிலாந்துக்கெதிரான லார்ட்ஸ் டெஸ்டில் தோற்றதால் 2 – 1 எனப் பின்தங்கியிருக்கும் இந்திய அணி தொடரை 2 – 2 என சமன் படுத்த நாளை (ஜூலை 23) நான்காவது டெஸ்டில் களமிறங்கவிருக்கிறது.கடந்த போட்டியில் பிளெயிங் லெவனில் ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதால் அவருக்குப் பதில் அணியில் யார் இடம் பிடிப்பார், பும்ரா களமிறங்குவாரா, மூன்று டெஸ்ட் போட்டியில் ஆடியும் ஒரு அரைசதம் கூட அடிக்காத கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படுமா…