பாளையங்கோட்டை: மேம்பாலம் பஸ் நிறுத்தங்களில் இருக்கை வசதிகள் இல்லை – பொதுமக்கள் கோரிக்கை!
திருநெல்வேலி: நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே அமைந்துள்ள செல்லப்பாண்டி மேம்பாலத்தின் கீழ் உள்ள பஸ் நிறுத்தங்கள், பயணிகளுக்குத் தேவையான இருக்கை வசதிகள் இல்லாமல் உள்ளன. இதனால் தினசரி பயணிக்கும் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.இப்பகுதியில் நெல்லை புதிய பஸ்நிலையம், நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. அம்பை, சுரண்டை, கடையம், செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம் மற்றும் கேரளா உள்ளிட்ட இடங்களிலிருந்து வரும் பஸ்கள் இங்கு நின்று பயணிகளை…