வேலூர்: கோட்டையில் செல்போன் பறிப்பு; எஸ்கேப்பாக அகழியில் குதித்த இளைஞர்- காப்பாற்றி கைதுசெய்த போலீஸ் | police caught a youth who involved in theft at vellore fort
வேலூர் என்று சொன்னாலே சட்டென நினைவுக்கு வருவது வேலூர் கோட்டை தான். வேலூர் கோட்டைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த வட மாநிலத்தை சேர்ந்த சுற்றலா பயணி ஒருவரிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார் வேலூரை சேர்ந்த ‘கோழி கோபி’ என்ற இளைஞர். சுற்றுலா பயணியின் செல்போனை பறித்து கொண்டு அவர் ஓட்டம் பிடித்தபோது, அவரை உள்ளூர் பொது மக்கள் சிலர்…