Ashwin : ‘TNPL இல் நடுவருடன் வாக்குவாதம்; களத்தில் ஆவேசம்!’ – அஷ்வின் செய்தது தவறுதான் – ஏன் தெரியுமா?
தொழில்நுட்பங்களால் கூட 100% துல்லியமான முடிவை அளிக்க முடியாது என்பதற்காகத்தான் இன்னமும் ‘Umpires Call’ என்கிற பதத்தை வைத்திருக்கிறார்கள். நடுவரின் முடிவு சரியோ தவறோ அதை மதித்துதான் ஆக வேண்டும். அப்படியில்லாமல் அஷ்வின் மாதிரியான அனுபவ வீரரே இப்படியெல்லாம் ரியாக்ட் செய்வது நடுவரின் முடிவுகளை அவமதிக்கும் செயலாகத்தான் பார்க்க முடியும். மேலும், அஷ்வின் இதை TNPL போன்ற உள்ளூர் லீகில் செய்கிறார். சுற்றி முற்றி இளம் தமிழக வீரர்கள் சூழ்ந்திருக்கையில், அஷ்வினின் இந்த செயல் நிச்சயமாக தவறான…