லாஸ் ஏஞ்சலிஸ்: டிரம்பின் குடியேற்ற கொள்கைக்கு எதிராக 3 நாட்களாக போராட்டம் – என்ன நடக்கிறது?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ள லாஸ் ஏஞ்சலிஸுக்கு அருகே உள்ள ஒரு வன்பொருள் கடையின் கார் நிறுத்துமிடத்தில், ஜுவானும் அவரது நண்பர்களும் கூடியிருந்தனர்.பொதுவாக, தினக்கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அங்கு கூடியிருப்பர். அந்தக் கூட்டத்தில் உள்ள ஆவணமற்ற குடியேறிகள் பலர், அங்குள்ள கடைக்காரர்களிடமிருந்தோ அல்லது ஒப்பந்த வேலை தரும் ஆட்களிடமோ வேலை தேடுகிறார்கள்.ஆனால் ஞாயிற்றுக்கிழமை, பாரமவுண்ட் புறநகரில் உள்ள ஹோம் டிப்போவுக்கு (கட்டுமானப் பொருட்கள்…